ஒட்டன்சத்திரம் அருகே 11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தட்டக்குழிக்காடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் சரவணக்குமார்.. 21 வயதுடைய இவர் புலிக்குத்திக்காடு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். பின்னர் கடந்த ஓராண்டாக அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதில் அந்தசிறுமி 5 மாத கர்ப்பமானார். […]
