நேற்று (பிப்.19) தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 459 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 57 ஆயிரத்து 746 பேர் போட்டியில் உள்ளனர். தேர்தல் பணியில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்பு பணியில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். […]
