சண்முகநதி அணையில் இருந்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டுள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் 52.50 அடி உயரம் கொண்ட சண்முகநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்ன ஒவுலபுரம், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், அப்பிபட்டி, ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம் போன்ற 30க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் நிரப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பகுதியில் அப்பகுதியில் பெய்து வரும் பெய்த கனமழை காரணமாக சண்முகநதி அணை நிரம்பி […]
