சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 44 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 44 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 26 பேரையும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 12 பேரையும், லாட்டரி சீட்டு விற்பனை செய்த […]
