சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தி சென்ற இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் போலீஸ் நிலையம் முன்பு போலீசார் நேற்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது சோளத்தட்டுகளுக்கு அடியில் 50 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சரக்கு ஆட்டோ ஓட்டுனர் […]
