அரசு மதுபாட்டில்களை வாங்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்று வந்த 4 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்கல் பத்மா நகர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ராணிப்பேட்டை காவல்துறையினர் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராணிப்பேட்டை மாந்தாங்கல் பத்மா நகர் பகுதியில் வசிக்கும் கோகிலா, ராணி ஆகிய இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அரசு மது […]
