சட்டவிரோதமாக மண் அள்ளிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆமத்தூர் கிராம நிர்வாக அதிகாரி உமா கணேசனுக்கு குருமூர்த்திநாயக்கன்பட்டியில் உள்ள ஓடையில் கிராவல் மண் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வருவாய் ஆய்வாளர் மலர்கொடி மற்றும் ஆமாத்தூர் காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் அங்கு பார்த்தபோது எவ்வித அனுமதியும் இன்றி ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஒரு டிராக்டரில் மணல் […]
