சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் திருமண பதிவு சான்றிதழ் வழங்கலாம் என மதுரை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருசுழியைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் லெடியா என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் சென்ற ஜூன் மாதம் பத்தாம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் தங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய கோரி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று ஜூன் 17ஆம் தேதி கேட்டபொழுது சார் பதிவாளர் லெடியாவுக்கு 21 வயது பூர்த்தியாகவில்லை என […]
