நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிட்ட 140 வேட்பாளர்களில் 116 வேட்பாளர்களை விட நோட்டாவிற்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றுள்ளது. அனைத்து தொகுதியிலும் அதிமுக, திமுக, பாமக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி என பல கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என 140 பேர் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. […]
