முதல்முறையாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நடிகை அமெரிக்க ராணுவத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021-ஆம் வருடத்தில் சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு திகில் திரைப்படமாக வெளிவந்தது, ‘காதம்பரி’. இத்திரைப்படத்தில் அகிலா நாராயணன் என்பவர் கதாநாயகியாக அறிமுகமானார். அமெரிக்காவில் வசிக்கும் இவர் கலை மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்ததால், தனியாக முயற்சி மேற்கொண்டு தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியிருந்தார். நடிப்பு மட்டுமின்றி பிரபல பாடகியாகவும் இருக்கும் அகிலா நாராயணன், ராணுவத்தில் சேர வேண்டும் என்று தீர்மானித்தார். […]
