நாகப்பட்டினம் வேலூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் அருகே சட்ட விரோதமான செயல்கள் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் ஆனந்த குமார் ஆகியோர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மாட்டு வண்டிகளில் வெட்டாற்றிலிருந்து மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் […]
