சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சம்பட்டி பகுதியில் மோகன், ஆறுமுகம் என்ற வாலிபர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தில் சென்ற மோகன்,ஆறுமுகம் ஆகிய இருவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அவர்கள், வைத்திருந்த பையில் தடை செய்யப்பட்ட […]
