சட்டவிரோதமாக கேளையாட்டின் இறைச்சியை சமைத்து சாப்பிட முயன்ற வாலிபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் உள்ள பாறைப்பட்டி கிராமத்தில் அந்தோணி கிளின்டன் என்ற பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். பாலாஜி தனது தோட்டத்தில் வைத்த கண்ணியில் கேளையாடு ஒன்று சிக்கி இறந்துள்ளது. இதனையடுத்து பாலாஜி அந்த கேளையாட்டின் இறைச்சியை சமைத்து சாப்பிட திட்டமிட்டுள்ளார். இது குறித்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாலாஜியை கையும் களவுமாக […]
