அதிமுகவை கைப்பற்றுவதில் சசிகலா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனால் அதற்கான வாய்ப்புகள் அவருக்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் என்று சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், அவர் பாஜகவில் இணைய விரும்பினால் நாங்கள் அவரை வரவேற்போம். அவருடைய வருகை பாஜக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும், கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை பாஜக […]
