பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நியாய விலை கடை ஒன்று கட்டப்பட்டது. முன்னாள் மின்சார துறை அமைச்சரும், தற்பொழுதுள்ள சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி அவர்கள் இதனை திறந்து வைத்தார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் 500 வாக்குறுதியை கொடுத்தார். ஆனால் அதில் 200 வாக்குறுதியை மட்டுமே நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில் முதல்வர் எந்தெந்த வாக்குறுதியை […]
