தமிழகத்தில் மோசடியாக பதிவு செய்யப்படும் பத்திரங்களை மாவட்ட பதிவாளரே ரத்து செய்வதற்கான சட்ட திருத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதாவது ஒரு நபருக்கு தெரியாமல் அவரது சொத்தை மற்றொரு நபர் வேறு பெயர்களில் பதிவு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் பாதிக்கப்பட்ட நபர் காவல் துறையில் புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதனிடையே காவல்துறை விசாரணையில் மோசடி நடந்தது உறுதியாகும் சமயத்தில் அந்த பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும். அந்த விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தில் […]
