ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டாய் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த ஊராட்சியில் துணைத்தலைவர் ஊராட்சி செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் ஜூலை 17-ஆம் தேதி ஊராட்சி மன்ற கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் […]
