இந்து பண்டிகைகளில் முக்கியமான ஒன்றாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஆண்டுக்கு இரு முறை கொண்டாடப்படுகின்றது. அதாவது முதலில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும் சைத்ர நவராத்திரி அல்லது வசந்த நவராத்திரி என அழைக்கப்படுகிறது. இரண்டாவது அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் ஷரத் நவராத்திரி என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் துர்கா தேவியினுடைய ஒன்பது அவதாரங்களும் ஒன்பது நாட்களில் விழா எடுத்து கொண்டாடப்படுகின்றது. இது இந்தியா முழுவதும் பல பகுதிகளில் பெரும் உற்சாகத்துடனும் பக்தியுடனும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. […]
