தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற திரைப்படங்கள் வந்தது. மேலும் “த கிரேமேன்” என்ற ஹாலிவுட் திரைப்படமும் வெளியாகியது. இப்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள “வாத்தி” திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் தனுஷ் நடிக்கிறார். இவற்றில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்துக்கு பின் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகவுள்ள சரித்திர கதை அம்சம் உள்ள திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். […]
