சசிகலா ஒவ்வொரு அறிக்கையிலும் தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கூறி வருகிறார். அதாவது தன்னுடைய ஒவ்வொரு அறிக்கையின் முடிவிலும் சசிகலா தன்னை அஇஅதிமுக கழக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டிருப்பது வழக்கம். ஆனால் கடந்த 24-ஆம் தேதி எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு சசிகலா வெளியிட்டிருந்த அறிக்கையில் அஇஅதிமுக என்பது இடம்பெறவில்லை. இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சசிகலா மீண்டும் தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
