விடுதலையான சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளபபட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் தண்டனை காலம் முடிந்து இன்று சசிகலா விடுதலையாகி உள்ளார். இதையடுத்து விக்டோரியா மருத்துவமனையில் உள்ள சசிகலாவிடம் சிறையில் அவர் பயன்படுத்திய உடமைகளை ஒப்படைக்கப்பட்டது. மேலும் பல மருத்துவமனையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த போலீசார் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
