சசிகலா தமிழகம் முழுவதும் ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்கிடையே சசிகலா சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப் பயணமாக காரில் வந்தார். நேற்று முன்தினம் காலையில் நாமக்கல் வந்த சசிகலா, அங்குள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். பின்னர் அவர் திருச்செங்கோடு, சங்ககிரி வழியாக சேலம் வந்தார். சேலம் ராஜகணபதி கோவிலில் சாமி தரிசனத்தை முடித்த அவர் சேலம் மாமாங்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். நேற்று 2வது நாளாக மாமாங்கத்தில் […]
