சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் கொரோனா தொற்றின் காரணமாக நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சசிகலாவின் உடலில் தொடர்ந்து சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. […]
