தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதிலிருந்தே அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சசிகலாவுக்கு எதிரான புகார்களை, அல்லது யூகங்களை சேகரித்த ஆணையம் சசிகலாவை நேரடியாக அழைத்து விசாரிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர். சிறையில் இருந்த போது ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் தனது வழக்கறிஞர் மூலம் எழுத்து மூலமாகவே தான் விளக்கம் அளித்தார். […]
