2000 ஆண்டுகளுக்கு முன்பு சங்க கால மக்கள் பயன்படுத்திய பழமையான பொருட்களை தொல்லியல் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் கள ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் 2000 ஆண்டுகள் பழமையான பொருட்களை கண்டறிந்தார். இவை சங்க கால மக்கள் பயன்படுத்தியது ஆகும். இதுகுறித்து இமானுவேல் கூறியதாவது, சங்ககால மக்கள் பயன்படுத்திய கெண்டி மூக்கு பானை, சுடுமண் தாங்கி, அகல் விளக்கு, குறியீடு உள்ள பானை, ஓடு சிவப்பு நிற வழவழப்பான […]
