தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு (99) கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து சங்கரய்யா சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
