2.1 கோடி மக்கள் வாழக்கூடிய நாட்டை 226 நபர்கள் மண்டியிட வைத்துள்ளனர் என்று இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்காரா தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் நேரலையில் ஹெஷான் டி சில்வாவுடன் நடைபெற்ற நேர்காணில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்காரா கூறியதாவது “நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள் மோசமான கொள்கைகளை வகுத்துள்ளனர் மற்றும் மோசமான நிதி நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளனர். எனினும் அதனைவிட மோசமாக அவர்கள் தங்களது சொந்தகுடிமக்களை இந்த உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் கொண்டு வந்ததற்கு கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. […]
