விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து பள்ளி மாணவரை கொலை செய்த சக மாணவியரின் தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மாலதி. இவருக்கு மணிகண்டன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். மணிகண்டன் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியின் ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று முன்தினம் […]
