சீனாவின் கிழக்கே தைவான் நாட்டில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலின்படி இது 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. தைவான் நாட்டின் கிழக்கே இருக்கும் தலைநகரான தைபேயிலும் நடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. பெரிய நடுக்கத்திற்கு பிறகு அவ்வப்போது சிறிய நடுக்கங்களும் ஏற்பட்டதாக தைவான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாதிப்பு விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.
