பிரபல திரைப்பட நடிகர் சக்கரவர்த்தி காலமானார். அவருக்கு வயது 62. உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் இன்று காலமானார். 80களில் பிரபலமான இவர் தமிழில் ரிஷிமூலம், முள் இல்லாத ரோஜா உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
