சுவிட்சர்லாந்தில் ஒரு குடியிருப்பில் அக்காள், தம்பி இருவரும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் இருக்கும் Frick என்ற பகுதியின் ஒரு குடியிருப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, சகோதரர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். அதாவது, 26 வயதுடைய அந்த பெண் தான், தன் சகோதரரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருக்கிறார். அதன்பின்பு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, சகோதரர்கள் இருவரும் கடுமையாக சண்டையிட்டு ஒருவரை ஒருவர் தாக்கியது […]
