சமந்தா நடிப்பில் உருவாகி வரும் சகுந்தலம் படத்தில் அல்லு அர்ஜுனின் மகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருக்கிறார் . தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா . தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் சகுந்தலம் படத்தை குணசேகர் இயக்கி வருகிறார். இவர் அனுஷ்கா நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . […]
