கோவில் திருவிழாவின்போது மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எடப்பாளையம் கிராமத்தில் எட்டியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் முருகன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். இதேப்போன்று திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரும் நண்பர்களுடன் கோவிலுக்கு வந்துள்ளார். இந்த கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் பார்த்திபனும், ஆகாஷும் […]
