தமிழகத்தின் பல இடங்களில் பெண் குழந்தைகளை வன்கொடுமைகள் படுத்துவதாக பல செய்திகள், தினந்தோறும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இதைத் தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், பெண் குழந்தைகளுக்கான சரியான பாதுகாப்பு எதுவும் கிடைக்காமல் உள்ளது. மேலும் பல இடங்களில் உள்ள பெண் குழந்தைகள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பற்றி அறியாமலேயே இருக்கின்றனர். எனவே இந்த நிலைமையிலிருந்து பெண் குழந்தைகளுக்கான குற்றங்களை தடுப்பதற்காக, ‘புராஜக்ட் பள்ளிக்கூடம்’ என்ற திட்டம் புதிதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. […]
