மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கோவில் வீதி பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன்(30). இவர் அங்குள்ள தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி, ஹரிணி(3) மற்றும் பிரியதர்சினி(6) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியதர்ஷினி திடீரென்று கீழே விழுந்ததால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
