கோவையில் நடைபெற்ற ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்போம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை குறைக்கவில்லை. நாங்கள் தேர்தல் வாக்குறுதிகளை தான் நிறைவேற்ற சொல்கிறோம். திமுக தேர்தல் வாக்குறுதியாக பொய் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளது. பொய் சொல்வதற்காக ஒரு போட்டி வைத்தால் அதில் தமிழக அமைச்சர்கள் […]
