சாதி அடிப்படையில் செங்கோட்டையன் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளிக்க வேண்டும் என்று கோவை செல்வ ராஜ் வலியுறுத்தி இருக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகமும், ஜெயக்குமாரும் அரசியல் தலைவர்கள் அல்ல சர்க்கஸ் கோமாளிகள் என்று கோவை செல்வ ராஜ் காட்டமாக விமர்சித்து இருக்கிறார். சென்னை பசுமைவழி சாலையிலுள்ள ஒ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை செல்வ ராஜ் கூறியதாவது “நேற்றைய தினம் நடந்த பொது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் […]
