சுமார் 12 வாரங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவை குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கோவை குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை தனி வாகனத்தில் வனத்துறையினர் அழைத்துச் செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இந்த அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 12 வாரங்களுக்கு பிறகு அருவியில் […]
