கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக தினேஷ் 39 ரன்கள் எடுத்தார். […]
