கோயம்புத்தூர் மாவட்டத்தில் கார் வெடி விபத்து நடந்தது மாநிலம் முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உடற்கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடந்ததால் தீபாவளியை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் என பாஜக உட்பட பல்வேறு கட்சிகள் குற்றம் சுமத்தியது. அதன் பின் ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்படும் ஒற்றை ஓநாய் தாக்குதல் முறைதான் கோவையிலும் […]
