கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் குண்டு வெடித்த சம்பத்தில் ஏற்கனவே 9 பேரை NIA அதிகாரிகள் கைது செய்தார்கள். முதல் கட்டமாக இந்த சம்பவம் நடந்தவுடன் கோவை மாநகரப் போலீசார் 6 பேரை கைது செய்திருந்தார்கள். அதைத்தொடர்ந்து இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து மேலும் மூன்று பேரை NIA அதிகாரிகள் கைது செய்தார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். […]
