உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் 20 பேருக்கு முதல் டோஸாக கோவிஷீல்ட் போடப்பட்ட நிலையில் இரண்டாவது டோஸாக கோவாக்சின் போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் அங்கு வசிக்கும் கிராமவாசிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் டோஸாக கோவிஷீல்டை செலுத்தி கொண்டனர். இதையடுத்து மே 14-ஆம் தேதி இரண்டாவது டோஸ் போடப்பட்டது. ஆனால் இரண்டாவது டோஸாக கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. […]
