முருகன் கோவிலின் ஊழியரை யானை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 22-ஆம் தேதி எண்ணெய்க்காப்பு திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் தினமும் இரவில் தெய்வானை அம்மாள் திருவாச்சி மண்டபத்தை சுற்றி வலம் வருவது வழக்கம். அதைப்போல் நேற்றும் தெய்வானை அம்மாள் இரவில் வலம் வந்தபோது அவர் பின்னால் வந்த யானைக்கு கோவில் ஊழியரான புகழேந்தி என்பவர் […]
