புதுக்கோட்டை மாவட்டத்தில் முருகன் கோவிலில் ஊரடங்கால் வைகாசி விசாகம் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகம் வெகு விமரிசையாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு அறிவித்துள்ளதால் வைகாசி விசாகம் திருவிழா நடைபெறவில்லை. இதனால் வழக்கம் போல் முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றுள்ளது. ஆனால் பக்தர்களின்றி பூஜைகள் செய்ததால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
