தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமான ஏழு கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமாக திருவெறும்பூர் எல்லக்குடி கிராமத்தில் ஆறு இடங்களில் 3 ஏக்கர் 49 சென்ட் நிலம் பல வருடங்களுக்கு முன்பாக தனியாருக்கு குத்தகை விடப்பட்ட நிலையில் குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தினால் திருச்சி வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றம் உரிய தொகையை செலுத்த உத்தரவிட்டும் அந்த தொகை செலுத்தப்படாத நிலையில் செயலாக்க வருவாய் ஆய்வாளரால் மேற்படி […]
