தமிழகத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்களிடமிருந்து அந்த நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத் துறையினர் சார்பில் நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பணிகளை சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு நேரில் சென்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இதுவரை தமிழக கோவில்களுக்கு சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து மொத்தம் 150 நில அளவையாளர்கள் மூலம் இந்த பணிகளை 56 ரோவர் […]
