திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள தாழையூத்து கிராமத்தில் இருந்து இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமான அங்காளம்மன், மாரியம்மன், வேலுசமுத்திரம், செங்கழுநீரம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான ரூ.33 லட்சம் மதிப்பிலான 25.95 ஏக்கர் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அறநிலைய துறையினர் கோவில் நிலங்களை மீட்க முடிவு செய்தனர். அதன்படி அறநிலைத்துறை திண்டுக்கல் உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் அதிகாரி ராமநாதன், தாசில்தார் விஜயலட்சுமி, ஆய்வாளர்கள் […]
