கோவில் நிர்வாகி திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் காமராஜர் தெருவில் விவசாயியான வெங்கடேஷ் ராஜா(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் நிர்வாக கமிட்டி துணை செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கோவிலுக்கு சென்ற ராஜாவுடன் சமீபத்தில் விழா நடத்தியது தொடர்பாக மற்றொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற […]
