கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பெரியகாட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் திருக்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதிகாலையில் ஏதோ உடைக்கும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கோவிலுக்கு வந்து பார்த்தனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியலின் பூட்டை 4 பேர் உடைத்துக் கொண்டிருந்தனர். இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்கள் 4 பேரையும் விரைந்து சென்று பிடிக்க முயன்றனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் உடனே பொதுமக்கள் […]
