கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டு கிராமத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சம்பத் என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 12-ஆம் தேதி பூஜை செய்வதற்காக சம்பத் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோவில் கதவை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து சம்பத் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல கோவிலுக்கு சென்ற சம்பத் கோவில் வளாகத்தில் 500 மற்றும் 100 […]
